நுண்ணறிவு வினாவிடை புத்தகம் 01 | லோகநாதன் ஆசான்.

நுண்ணறிவு வினாவிடை புத்தகம் 01 | லோகநாதன் ஆசான்.

அனைத்து போட்டிப் பரீட்சைக்கும் உதவக்கூடியது.

சமுதாயத்தின் பல்வேறு துறைகளிலும் ஆற்றல் உடையவர்களைக் கண்டறிவதற்கு விவேகப் பரீட்சைகள் இன்றியமையாதனவாகக் காணப்படுகின்றன. இலங்கையில் இன்று ஆண்டு ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பொதுவிவேகம் தொடர்பான வினாக்கள் பெருமளவில் காணப்படுவதைக் காணலாம். மேல் வகுப்புகளுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு மேலை நாடுகளில் விவேகப் பரீட்சைகள் பயன்படுத்தப்படுகின்றன. எதிர்வரும் காலங்களில் இலங்கையில் பல்கலைக் கழகங்களுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும். ஆசிரியப் பயிற்சிக் கலாசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் இத்தகைய பரீட்சைகளே பயன்படுத்தப்படவுள்ளன.

தொழில் துறைகளில் தகுதியானவர்களைத் தேர்ந்து எடுப்பதற்கு நீண்ட காலமாக இலங்கையில் விவேகப் பரீட்சைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இலங்கையில் இன்று அரசாங்க துறைகளில் உள்ள எல்லா வேலை வாய்ப்புகளும் விவேகப் பரீட்சைகளின் மூலமே நிரப்பப்படுகின்றன. உளக்குறைபாடு உடைய மாணவர்களை இனம் காணவும் அவர்களுக்கு விசேட கல்வி அளிக்கவும் இத்தகைய பரீட்சைகள் உதவுகின்றன. பொதுவாக எல்லா துறைகளிலும் சிறப்புமிக்கவர்களை வெளிக்கொண்டுவர பொதுவிவேகம் தொடர்பான பரீட்சைகள் இன்றியமையாதனவாகும்.

பொதுவிவேகப் பரீட்சை வினாத்தாள்கள் பல்வேறு திறன்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய திறன்கள் ஆரம்பகாலங்களிலும் பார்க்க இன்று பெருமளவு வளர்ச்சியடைந்துள்ளன. இன்றைய கணனி யுகத்தில் இத்தகைய திறன்கள் எவை எவை என வரையறை செய்தல் கடினமாகும். எனினும் எண்திறன் (Numeral ability). சொற்திறன் (Verbal ability). மொழித்திறன் (Language ability). ஆய்ந்தறிவுத் திறன் (Rcasoning ability),  (Logical ability), (Mathamatical ability),  (Visual ability), (Codewords ability). அவதானிப்புத்திறன் (Observation ability) என பல்வேறு வகையான திறன்களை அடிப்படையாகக் கொண்டு வினாத்தாள்கள் தயாரிக்கப்படுகின்றன.

நீண்ட காலமாக பொதுவிவேகத்தை அளவிட விவேக ஈவு (Intelligence quotient) என்னும் முறை பின்பற்றப்பட்டு வருகின்றது. ஆனால் இன்று வேறு பல முறைகளும் பொது விவேகத்தை அளவிட பயன்படுத்தப்படுகின்றது. உளவயதையும் கால வயதையும் அடைப்படையாகக் கொண்டே இக் கணிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. காலவயதிலும் பார்க்க உளவயது கூடுதலாக அமையும். 10வயது (கால வயது) மாணவன் 15 வயது (உளவயது) மாணவனுக்குரிய வினாத்தாள்களுக்கு விடையளிக்க வேண்டும்.

பொதுவிவேகப் பரீட்சைகள் ஒரு வகையில் ஒரு நேரப் பரீட்சை என்றே கூறலாம். இப் பரீட்சைகளில் நேரம் அதிமுக்கியத்துவம் வாய்ந்த காரணியாகக் கருதப்படுகின்றது. ஒவ்வொரு வினாவும் இலகுவானதாகக் காணப்படலாம். ஆனால் குறிக்கப்பட்ட நேரத்திற்கிடையில் அவற்றினை செய்ய முடியாது போகலாம். எனவே எல்லா வினாக்களுக்கும் குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் விடை அளிப்பதன மூலமே ஒருவரது விவேக ஆற்றலை அளவிட முடியும். பொதுவிவேகப் பரீட்சையில் தரப்படும் வினாக்கள் சாதாரண பரீட்சையில் தரப்படும். வினாக்களைப் போன்று செய்முறை கணிப்பீடுகளுடன் தொடர்பு உடையன அல்ல. எனவே மிக வேகமாக ஒரு விடயத்தை வாசித்து அவற்றை நினைவில் வைத்து அதனை ஆராயந்து விடையளிக்க வேண்டும்.

பல்வேறு விவேக நூல்களை கற்றதன் மூலமும், நீண்டகாலமாக பொது விவேகம் தொடர்பான பரீட்சைகளுக்கு கற்பித்த அனுபவத்தை கொண்டும் இந்நூலை வெளியிட்டுள்ளேன். தமிழில் கல்வி பயிலும் மாணவர்களின் தேவை கருதியும். தமிழ்மொழி மூலம் தொழில் தேடுவோரினது நலன் கருதியும் குறிப்பாக அடுத்த நூற்றாண்டில் உயர்கல்வியை (உ.த.) எதிர்நோக்கும் மாணவர்களின் தேவைகருதியும் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.

பொது விழிப்பு என்பது தேசிய. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த எண்ணக் கருக்களினதும். மெய்ப்பாடுகளினதும் விமர்சனரீதியான விழிப்பாகும். பொருளாதார, சமூக, கலாசார, சுற்றாடல், சட்ட, விஞ்ஞான, தொழினுணுக்கத் துறைகளில் உள்ள தேசிய. சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான எண்ணக் கருக்கள் இதில் இடம் பெறும். பிரச்சினைகளைத் தீர்த்தல் என்பது மூன்று உள்நோக்கறிவுகளை உள்ளடக்கியது. பிரச்சினையைத் தீர்க்கப் பயன்படுத்த வேண்டிய தகவற் கூறுகளைப் பெறல். அவற்றின் இயல்பொதத நிலமைகளைக் காணல். அதனை மீளவமைத்தல் என்பனவே அவையாகும். ஆட்கள், இடங்கள். பொருள்கள், நிகழ்ச்சிகள், எண்கள் போன்ற உள்ளவற்றுக்கிடையேயான விளைவுகளைக் கண்டுபிடிக்கும் ஆற்றலே நியாயிக்கும் ஆற்றல் எனலாம். கிரகிப்பும் தொடர்பாடலும் பல செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளன. கருத்துக்களை இனங்காணல், அவற்றைதிருத்தமாக எடுத்துரைத்தல் ஆகியன இதில் முக்கியம் பெறும். இது ஒரு பாட நூல் அல்ல. ஆகையால் ஒவ்வொரு பயிற்சியிலும் வரும் வினாக்கள் பல்வேறுபட்ட புலமைகளை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. இப்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் ஒவ்வொருவரும் தமது விவேக ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். உயர்கல்வித்துறையிலும். தொழில் துறையிலும், பரீட்சைகளுக்கு தோற்று வோர்களுக்கு உதவும் ஒரு பயிற்சி நூலாகவே இது வெளியிடப்பட்டுள்ளது.

PDF பெற்றுக்கொள்ள கீழே உள்ள link னை click செய்யவும்

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *