நிலத்தோற்ற கட்டிடக்கலை | Landscape Architecture
கற்கைநெறி இலக்கம் – 097 (உத்தேச அனுமதி – 81)
இலங்கையின் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் மிக முக்கியமான கற்கை நெறியாக காணப்படுவது இத்தகைய நிலத்தோற்ற கட்டிடக் கலையாகும். இத்தகைய கற்கையினை எந்தவொரு பாடப்பிரிவில் கல்வி கற்கும் மாணவருக்கும் பயில முடியும். இதற்காக பின்வரும் தகமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.
அனுமதிக்கான ஆகக் குறைந்த தகைமைகள்
க.பொ.த (உ/த) பரீட்சையில் பின்வரும் பாடங்களில் குறைந்தது “S” சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
- பின்வரும் பாடங்களில் குறைந்தது ஒரு பாடத்தையேனும் தெரிவு செய்தல் வேண்டும்
-
-
- சித்திரம்
- உயிரியல்
- இரசாயனவியல்
- இணைந்த கணிதம்
- புவியியல்
- உயர் கணிதம்
- பௌதீகவியல்
- விவசாய விஞ்ஞானம்
-
மற்றும்
பின்வரும் நிரலில் ஏனைய பாடங்களை தெரிவு செய்தல் வேண்டும்.
-
-
- கணக்கீடு
- அரபு
- பௌத்த நாகரீகம்
- வணிக புள்ளிவிபரவியல்
- சீன மொழி
- கிரேக்க உரோம நாகரீகம்
- பொருளியல்
- கணிதம்
- ஆங்கிலம்
- பிரெஞ்சு
- ஜெர்மன்
- தமிழ்
- கிறிஸ்தவ நாகரீகம்
- ஹிந்தி
- இந்து நாகரீகம்
- வரலாறு
- மனைப் பொருளியல்
- இஸ்லாமிய நாகரீகம்
- ஜப்பானிய மொழி
- அளவியல்
- பாளி
- சமஸ்கிருதம்
- சிங்களம்
- தொடர்பாடல் ஊடகக்கற்கை
- தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம்
-
மேலதிகாக, பரீட்சாத்திகள் பின்வரும் தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
- க.பொ.த (சா/த) பரீட்சையில் குறைந்தது ஆங்கிலத்தில் சித்தி (S).
- க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதத்தில் குறைந்தது திறமைச் சித்தி (C) அல்லது க.பொ.த (உ/த) பரீட்சையில் குறைந்தது கணிதத்தில் சித்தி (S).
- மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் உளச்சார்புப் பரீட்சையில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.
(அ). பட்ட நிகழ்ச்சித்திட்டம் :- நிலத்தோற்றக் கட்டிடக்கலை இளமாணி
(ஆ). பல்கலைக்கழகம் :- மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
(இ). காலம் :- 04 வருடங்கள்
உளச்சார்புப் பரீட்சைக்கு தொற்றுவதற்கான விண்ணப்பங்களைக் கோரி பத்திரிகை அறிவித்தல் ஒன்றை மொறட்டுவைப் பல்கலைக்கழகம் பிரசுரிக்கும். பரீட்சாத்திகள் மேலதிக விபரங்களுக்கு மொறட்டுவைப் பல்கலைக்கழக பதிவாளருடன் தொடர்பு கொள்ளலாம்.
பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்துடன் க.பொ.த.(சா/த) மூலச்சான்றிதழின் தகுந்த உறுதி செய்யப்பட பிரதியினை(Certified Copy) பரீட்சார்த்திகள் சமர்ப்பிக்க வேண்டும். அதனைச் சமர்ப்பிக்கத் தவறின் நிலத்தோற்றக் கட்டிடக்கலை விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
